Ad Widget

புதிய அரசியல் சீர்த்திருத்தங்கள் தொடர்பாக வட மாகாணத்தில் செயலமர்வு

புதிய அரசியல் அமைப்பின் சீர்த்திருத்தங்கள் தொடர்பாக வட மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று நேற்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது புதிய அரசின் அரசியல் அமைப்பிற்க்கும் மக்களுக்கும் இடையில் காணப்படும் அதிகரித்துள்ள தொடர்பாடல்கள், சமூக இனங்களின் ஒற்றுமைக்கான வழிகள், மற்றும் பிரதேச வழிகளினான முன்னேடுக்கப்படுகின்ற கால அமைப்புகள், அரசியல் அமைப்பின் தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் இவ் செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டன.

இதில் வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு இடம்பெற்றது. இதில் சுவிஸ், தென் கொரிய ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புகளின் சிரேஷ்ட மற்றும் பல்கலைக பேராசிரியர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன் போது வளாவளர்களாக கருத்து தெரிவித்த அரசியல் அமைப்புகள் தொடர்பிலான சிரேஷ்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள், இலங்கையின் புதிய அரசியல் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் இனங்கண்டுள்ளதாகவும் அதனுடாக மக்களுக்கிடையில் பலவேறு நன்மைகள் காணமுடியும் எனவும் எதிர்காலத்தில் இலங்கை பல துறைகளில் மாற்றம் பெறும் எனவும் தெரிவித்தனர்.

Related Posts