புதிய அதிவேக தபால் சேவை ஆரம்பம்

post-fast-officeபுதிய அதிவேக தபால் சேவை உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரட்ணவின் ஆலோசனைக்கு அமைவாக அதிவேக தபால் சேவை குருநாகல், ஹம்பாந்தேட்டை, காலி, இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து யாழிற்கான அதிவேக தபால் சேவை நேற்று வியாழக்கிழமை 1.30 மணியளவில் யாழ். அஞ்சல் திணைக்களத்தினை வந்தடைந்த போது, வடமாகாண அஞ்சல் மா அதிபர் நல்லதம்பி இரட்ணசிங்கம் மற்றும் யாழ். பிரதேச அஞ்சல் அதிபர் காசிப்பிள்ளை புஸ்பநாதன் ஆகியோர் முதலாவது பொதியினைப் பொறுப்பேற்றனர்.

அத்துடன், யாழிலிருந்து வவுனியாவிற்கான அதிவேக தபால் சேவை நேற்று வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வடமாகாண அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.