புதன் கிழமை மட்டும் 6 முறைப்பாடுகள்

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்று புதன் கிழமை மட்டும் 6 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். இவற்றுடன் கைது முறைப்பாடுகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

நவம்பர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யாழ். குடாநாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலதரப்பட்டோரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

3 முறைப்பாடுகள் வன்னி மாவட்டத்திலிருந்து கிடைக் கப்பெற்றுள்ளன. இந்த நிலையில் நேற்று புதன்கிழமை 6 முறைப் பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த ஞாயிற்றுக் கிழமை அச்சுவேலிப் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 5 பேரும், திங்கட்கிழமை சாவகச்சேரிப் பகுதியில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் தொடர்பிலுமே முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.