புங்குடுதீவு மாணவி படுகொலை : சட்டமா அதிபர் திணைக்களம் சரியான முடிவை எடுக்கும்

சட்டமா அதிபர் திணைக்களம் சரியான நடவடிக்கை எடுக்கும் வகையில், குற்றப் புலனாய்வு பொலிஸாரின் விசாரணை அறிக்கையானது உரிய முறையில் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (20) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 12 சந்தேகநபர்களும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, “குற்றப்புலனாய்வு பொலிஸாரின் விசாரணையில் குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளனரா?” எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த நீதவான், “குற்றப்புலனாய்வு பொலிஸாரின் விசாரணை அறிக்கையானது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் சரியான முடிவை எடுக்கும்” என்றார்.

“சட்டமா அதிபர் திணைக்களம் சரியான முடிவு எடுக்கும் வகையில், அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?” என மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மீண்டும் கேட்டார். அதற்கு நீதவான், “ஆம்” எனப் பதிலளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

Recommended For You

About the Author: Editor