புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயம் இன்று 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையால் அபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது நீண்ட காலத்தின் பின்னர் புனரமைப்புச் செய்யப்பட்ட சுமார் 150 வருட பழைமை வாய்ந்த இவ் ஆலயம் சுண்ணாம்புக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.தற்போதைய பங்குத் தந்தையான அருட் தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரின் முயற்சியினாலும் பங்கு மக்கள் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடனும் இவ் ஆலயம் புனரமைக்கப்பட்டுள்ளது யாழ் ஆயரினால் இவ் ஆலயம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் பங்கு மக்களினால் பங்கு தொடர்பாக நூலும் வெளியிடப்படவுள்ளது அத்துடன் குறித்த நூலானது வருடம் தோறும் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
- Wednesday
- March 19th, 2025