புங்குடுதீவில் கிராம அலுவலர்கள் பணி புறக்கணிப்பு

protest-arpaddam-stopபுங்குடுதீவு கிராம அலுவலரின் ஆலுவலகம் தாக்கப்பட்டமையைக் கண்டித்து வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

நீதிமன்றத்தினால் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட இருவரையும் நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு கிராம அலுவலர் பணித்திருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கடந்த 24 ஆம் திகதி மதுபோதையில் சென்று புங்குடுதீவில் உள்ள ஜே 26 கிராம அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆவணங்களைச் சேதமாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக பொலிஸார் கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதாக வேலணைப் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளா தேவி சதீசன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி
கிராம அலுவலரின் ஆவணங்கள் அழிப்பு; சந்தேகநபர்கள் தலைமறைவு

Recommended For You

About the Author: Editor