தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பனிமனை ,உடுவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பனிமனை என்பன இணைந்து சுகாதார அமைச்சின் 101நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று புகை எமது வாழ்விற்கு பகை எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.
அதன்படி காலை 8.30 மணிக்கு தெல்லிப்பழை வைத்திய அதிகாரியின் அலுவலக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி மல்லாகம் சந்திவரை சென்று முடிவடைந்தது. மேலும் மல்லாகம் சந்தியில் இருந்து உடுவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் சுன்னாகம் பேரூந்து நிலையப்பகுதி வரை குறித்த பேரணி தொடர்ந்தது. இதன்போது தெல்லிப்பழை மற்றும் உடுவில் பிரதேச செயலக அலுவலர்கள், பிரதேச சபை அலுவலர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.