புகையிரதம் மோதி ஆறு பிள்ளைகளின் தந்தை பலி

கிளிநொச்சி 155 ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழப்பாணம் நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் சிக்குண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor