பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதனை ஜெர்மன் புவிஅறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து உள்ளது.
இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							