பிறப்பு, இறப்பு திருமண பதிவுகளின் பிரதிகளை பெறுவதற்கான கட்டணங்கள் உயர்வு

RegPenஇலங்கையில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுகளின் பிரதிகளைப் பெறுவதற்கான கட்டணங்களும் ஜனவரி முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுகளின் ஒரு பிரதியை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நடைமுறையிலிருந்து வந்த 25 ரூபா கட்டணம் தற்போது 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பதிவிலக்கம் தெரியாத பிரதிகளைத் தேடுவதற்கு, தேடுதல் கட்டணமாக ஒரு பிரதிக்குரிய கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுகளின் பதிவு பிரதி அத்தாட்சிப்பத்திரத்தை பெறும் ஒருவர் அந்த பிரதியைப் பெறுவதற்கான விண்ணப்பபடிவத்தில் அதற்கு பெறுமதியான முத்திரை ஒட்டாமல் அதற்கான பணத்தை பிரதேச செயலகங்களிலுள்ள பதிவுக் கிளையில் செலுத்தி பற்றுச்சீட்டை பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor