Ad Widget

பிரிவினைவாதிகளுக்கு துணை போகவேண்டாம்: ஹத்துருசிங்க

mahinda_hathurusingheதமிழ் மக்கள், பிரிவினைவாதிகளுக்கு துணைபோகாது தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் பொதுமக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தினரால் இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

‘யுத்தம் முடிந்த பின்னர் மக்கள் அவரவர் பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவதையிட்டு ஒரு இராணுவ வீரன் என்ற வகையில் நான் பெருமையடைகின்றேன்.

இந்த மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்துகொண்டு அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர். யுத்தம் முடிந்த பின்னரான இவர்களின் சேவைகள் எதிர்காலத்திலும் இம்மக்களுக்கு தேவை. மீள்குடியேற்றப்பட்ட மக்களிற்கு தேவையான உதவிகள் மட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்க இராணுவத்தினர் தயாராக இருக்கின்றார்கள்.

இந்த நிலையில், தமிழ் மக்கள் பிரிவினைவாதிகளுக்கு துணைபோகாது உங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு செயற்பட வேண்டும்’ என்றார்.

தொடர்புடைய செய்தி

அக்கரை கிராமம் இராணுவத்தால் விடுவிப்பு

Related Posts