பிரித்தானிய குழு இன்று யாழிற்கு விஜயம்

Simon-Danczukஇலங்கை வந்துள்ள பிரித்தானியா பாராளுமன்ற குழு இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர் சைமன் சன்சக் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஒருவாரம் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள இந்த குழு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

அத்துடன் இலங்கையின் தற்போதைய மீளமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் அந்த குழு முழுமையான ஆராய்வினை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரித்தானியாவின் வெளிவிவகார திணைக்கள செயலாளர் எலஸ்டயார் பர்ட் இந்த முறை மனித உரிமை விடயங்களில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்த தவறினால் எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் அது தொடர்பில் பிரித்தானியா உயரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எச்சரித்திருந்தார்.

அதன் அடிப்படையிலேயே இந்த குழு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor