பிரித்தானிய எம்.பிகள் குழு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு!

Simon-Danczukஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவராலயத்தின் உயரதிகாரிகளும் பங்குபற்றினர்.கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிறீதரன் ஆகியோர் பங்குபற்றினர்.

பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையின் வடபகுதியில், போருக்கு பின்னரான காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை மற்றும் வாழ்வாதார நிலைமைகள், மாகாண சபைத் தேர்தல்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.