பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தது கூட்டமைப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton-இற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor