பிரபாகரனும் சூசையும் இறுதி வரை போரிட்டே உயிரிழந்தனர்: சரத் பொன்சேகா

கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை நிராகரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, போரின் இறுதிநாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சூசையும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  செய்தியாளர்களிடம் பேசியபோதே சரத் பொன்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,போரின் இறுதி நாளில் பிரபாகரன் மற்றும் 100 போராளிகளுடன் சூசையும் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். பிரபாகரன் மற்றும் சூசையின் குண்டுதுளைத்த உடல்களை நாம் கண்டெடுத்தோம்.

அவர் கடைசிவரை போராடியே மரணமானார் என்பதை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் எமக்கு கிடைத்தன.பிரபாகரனும், சூசையும் சயனைட் உட்கோள்ளவோ, தற்கொலை செய்து கொள்ளவோ இல்லை. விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானின் மனைவி தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

சயனைட் அருந்திய நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கழுத்தில் இன்னொரு சயனைட் கிடந்தது.பொட்டுஅம்மானின் நிலை குறித்து இராணுவம் அறியவில்லை. அவர் பற்றி எமக்குத் தகவல் கிடைக்கவில்லை. ஆனால், கடலேரியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது, அவரும் கொல்லப்பட்டு விட்டார் என்றே நாம் நம்புகிறோம்.

தற்கொலை அங்கியை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் இறந்ததாக கேபி அறிக்கை வெளியிட்டிருந்தார். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webadmin