பிரதேச சபை உறுப்பினரின் ஆவணங்கள் தீக்கிரை

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராசையா தெய்வேந்திரம் பிள்ளையின், எழுதுமட்டுவாள் வீட்டிலிருந்து ஆவணங்கள், விசமிகளினால் இன்று செவ்வாய்க்கிழமை (22) எரியூட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் அவர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

d (2)

வீட்டின் கதவுப் பூட்டினை உடைத்து உள்நுழைந்து, ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் ரூபா பணம் ஆகியன அடங்கியிருந்த பையினை வெளியில் போட்டு தீ மூட்டப்பட்டுள்ளன.

ஆசைப்பிள்ளையேற்றம் பகுதியில் நிலஅளவையாளர் திணைக்கள அலுவலர்களினால் காணி அளவீடு செய்வதினைத் தடுப்பதற்கான போராட்டத்தில் தான் கலந்துகொள்ளச் சென்ற தருணத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்தருணத்தில் தனது மனைவியும் பிள்ளைகளும் ஆலயம் ஒன்றிற்குச் சென்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.