பிரதேச அபிவிருத்திக்கு பாடுபடுங்கள்; யாழ் அரச அதிபர் கோரிக்கை

பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் தங்களது பிரதேச அபிவிருத்துக்காக பாடுபட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.பட்டதாரி பயிலுனர்கள் 514 பேரை பொருளாதர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைந்துக் கொள்ளப்படுவதற்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்

உங்களிடமிருந்து நிறைய எமது சமூகம் எதிர்பார்க்ப்படுகிறது. நாட்டின் அபிவிருத்திக்கு உங்களால் இயன்ற பங்களிப்புக்களை வழங்க வேண்டும். அத்துடன் உங்களது பிரதேச அபிவிருத்திக்காக உங்களால் இயன்ற பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இன்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாண செயலாளர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திணைக்கள அதிகாரிகள் ,திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts