வடபகுதி மக்களைச் சந்திப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் வடக்குக்கு வருகை தரவுள்ளார்.
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு முதன்முறையாக வந்திருந்தார்.
வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தையும், யாழ்.மாவட்ட வெயலகத்தில் நடத்தியிருந்தார்.
இந்த நிலையில் தேர்தலில் மாற்றத்துக்காக வாக்களித்த வடபகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கே வருகை தரவுள்ளார் என்று பிரதம அலுவலகம் தெரிவித்துள்ளது.