பிணையில் வீடு சென்றார் கமல்

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமல் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Kamal

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் றெக்சியன் படுகொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாகச் சிறையில் இருந்தார்.

கடந்த 29ஆம் திகதி கமலேந்திரனுக்கு நீதிமன்று பிணை அனுமதி வழங்கியபோதும், பிணை எடுக்க யாரும் முன்வராத நிலையில் அவர் தொடர்ந்தும் சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கமலேந்திரன் சார்பில் இருவர் பிணையில் எடுக்க முன்வந்திருந்தனர்.

இந்த நிலையில் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றம் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் பிணையில் செல்ல அனுமதித்தது.