யாழில். பிக் பொக்கட் மற்றும் சங்கிலி அறுப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த விஷேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பு இடம் பெற்றது இதன் போதே பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தேரிவிக்கையில்
கடந்த இரு தினங்களாக யாழில் சிறு குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
ஊர்காவற்துறை மற்றும் வல்வெட்டித்துறை பிரதேசங்களில் இரு சிறு குற்றங்கள் நடைபெற்றதாகவும், அதன் போது, இருவரை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.
யாழ். நகரில் அண்மைக்காலங்களில் பிக் பொக்கட் மற்றும் பெண்களிடம் சங்கிலி அறுப்பு சம்பவங்கள் அதிகரித்த போது, அவற்றினை கட்டுப்படுத்துவதற்காக யாழ். பஸ் நிலையம் மற்றம் பல்வேறு இடங்களில் விNஷட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால் பிக் பொக்கட் மற்றும் சங்கிலி அறுப்பு சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.