பாலியல் வன்புணர்வுக்கெதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு,கிழக்கு மாகாண சமூக மக்கள் ஒன்றிணைந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ்.வேம்படி சந்தியில் இந்தப் போராட்டத்தை நடாத்தினர்.

மேலும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் அரியாலை முள்ளி பிரதேசத்தில் 18வயது யுவதி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும்,இதே போல பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

பெண்கள் இனியாவது பாதுகாக்கப்பட வேண்டும் யாரும் பெண்கள் மீது கைவைப்பதை நிறுத்த வேண்டும்.எந்த பலம் வாய்ந்த சக்தியாக இருந்தாலும் நாம் அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்போம் எனவும் அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.