பாலியல் வன்புணர்வுகள் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி

வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்புணர்வுகள் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியொன்று, புன்னாலைக்கட்டுவன் சந்தியில் இருந்து பாடசாலை முன்றல் வரையில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் வி.ரி.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் வித்தியாலய ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பெண்கள், சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதுடன், அது தொடர்பில் பாடசாலை சார் சமூகத்துக்கும் அறிவிக்கும் முகமாக இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.

பேரணியின் முடிவில் ‘வருமுன் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் இறுவட்டு வெளியீடு செய்யப்பட்டது.

ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பெண்கள், சிறுவர்கள் வன்புணர்வுகளுக்க எதிரான விழிப்புணர்வு நாடகம் ஒன்றே இவ்வாறு இறுவட்டாக வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts