பாற்சாலை பணியாளர் மீது தாக்குல்

milkஅரியாலை மாம்பழச் சந்தியில் உள்ள பாற்சாலையின் பணியாளர் மீது பால் விநியோகம் செய்யும் நபர் இன்று சனிக்கிழமை (05) காலை தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அடர்த்தி குறைந்த பாலினை பால் விநியோகம் செய்யும் நபர் கொண்டு வந்து சாலையில் கொடுக்க முற்பட்ட வேளை, அதனை பணியாளர் ஏற்க மறுத்தமையினால் பணியாளர் மீது விநியோகத்தர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், தான் கொண்டு வந்த மற்றும் அங்கு ஏற்கெனவே இருந்த 20 லீற்றர் பால் ஆகியவற்றினை காலால் உதைத்து நிலத்தில் ஊற்றியுள்ளார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

மேற்படி பாற்சாலைக்கு பல விநியோகஸ்தர்கள் பால் விநியோகம் செய்து வருகின்றனர். பாலின் அடர்த்தியானது 1.026 என்ற அடர்த்தியளவில் இருக்க வேண்டும்.

இந்நிலையில் அதற்குக் குறைந்த நிலையில் மேற்படி விநியோகஸ்தர் பால் விநியோகம் செய்தமையினால் குறித்த பாலினை பணியாளர் ஏற்க மறுத்துள்ளார்.

இதனாலேயே குறித்த பணியாளர் மீது விநியோகஸ்தர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த பணியாளர் தனது சங்கத்தில் முறையிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor