பாரத ரத்னா விருதுக்கு ஜனாதிபதி மஹிந்த!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பாரத ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரி உள்ளார்.

mahintha-modi

புலிகளை அழித்தமைக்காக இவ்விருதை வழங்க வேண்டும் என்று இவர் குறிப்பிட்டு உள்ளார்.

இவர் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறுதியான தலைமைத்துவத்தால்தான் புலிகளை வேரறுக்க முடிந்தது, புலிகளை அழித்தமை இந்தியாவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட பங்களிப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.