பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.
சாவக்கச்சேரியிலுள்ள 52 ஆவது படையணி தலைமையகத்தில் அன்றையதினம் மாலை நடைபெறும் வைபவத்தில் கலந்துக்கொண்டு பாடசாலை மாணவர்கள் 1500 பேருக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் புத்தகங்களை வழங்கிவைப்பார்.
கனடாவில் வாழ்கின்ற இலங்கை பிரஜைகளின் உதவியுடனனேயே இவை வழங்கி மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்படவிருப்பதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.