பாதுகாப்புச் செயலாளர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
யாழ்ப்பாண குடாநாடு மற்றும் அண்டிய தீவுப் பகுதிகளின் பாதுகாப்பு நிலைமைகளை காண்காணிக்கவும், பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்வதற்கும் இந்த விஜயம் வழியமைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் விசேட புகைப்படக் கண்காட்சி ஒன்றையும் பாதுகாப்புச் செயலாளர் இன்று அங்குரார்ப்பணம் செய்ய உள்ளார்.

பாதுகாப்புச் செயலாளருடன் இராணுவப் படைத்தளபதி ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகளும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளனர்.