பாணின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

breadஇலங்கையில் பாணின் விலை உயர்த்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலஙகையில் மின்சாரக் கட்டணங்கள் 26 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து பாணின் விலை உயர்த்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதனால் உற்பத்திச் செலவு பெருமளவில் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக உற்பத்தி செலவு அதிகரித்துச் செல்வதாகவும் முடிந்தளவு விலையேற்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor