பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தத் தடை?

classroom-phoneபாடசாலை மாணவ, மாணவியர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கல்வி விவகாரம் குறித்து விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது.

பாடசாலை வகுப்பறைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்ப கருவிகளைத் தவிர்ந்த ஏனைய, தொழில்நுட்ப சாதனங்கள் பாடசாலைக்கு எடுத்துச் செல்லக் கூடாது. இவ்வாறு அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவ மாணவியரின் குணவியல்புகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த விடயம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.