பாகிஸ்தான் ஏர்போர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல், 23 பேர் பலி

பாகிஸ்தானின், கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உட்பட மொத்தம் 23 பேர் பலியாகியுள்ளனர்.

pakistan-karachi-airport

பாகிஸ்தானின் வர்த்த தலைநகரான கராச்சியில் உள்ளது ஜின்னா சர்வதேச விமான நிலையம். இங்கு நள்ளிரவில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் போல் உடையணிந்து நுழைந்த தீவிரவாதிகள் 10 பேர், துப்பாக்கி மற்றும் கையெறி வெடிகுண்டுகளை பயன்படுத்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலை தொடர்ந்து, அங்கு விமான சேவை நிறுத்தப்பட்டு, அனைத்து வழிகளும் மூடப்பட்டன.

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை இன்று காலை 8.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. 10 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஏர்போர்ட் முழுமையும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்தாகவும் ராணுவம் தெரிவித்தது.

இந்த தாக்குதலில் விமானம் ஏதும் சேதமடையவில்லை என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இருப்பினும் இன்று மாலை வரையில் கராச்சி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts