பஸ் நிலைய ஊழியர்கள் – பழக்கடை வியாபாரிகள் பிரச்சினைக்கு தீர்வு

கடந்த இரண்டு நாட்களாக யாழ். பஸ் நிலையப் பகுதியில் நடைபெற்றுவரும் பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே. ஜெகன்) யாழ் பஸ் நிலையப் பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.

bj

யாழ்ப்பாணம் போக்குவரத்து சாலை உத்தியோகத்தர்களுக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையில் நடைபெற்று வந்த முரண்பாடு பெரும் பிரச்சினையாகி அடிதடியில் முடிந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் நிலைமை மிகவும் மேசமாக மாறக்கூடிய நிலை அப்பகுதியில் காணப்பட்டதைத் தொடர்ந்தே ஒருங்கிணைப்பாளர் அப்பகுதிக்கு சென்று மத்திய பஸ் நிலைய பகுதிக்குள் பழம் மற்றும் மணிக்கடை வியாபாரத்திலீடுபடும் வியாபாரிகள், போக்குவரத்து சாலை ஊழியர்கள் ஆகியோருடன் பேசி வியாபாரிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரி போக்குவரவுத் துறை ஊழியர்கள் மேற்கொண்ட பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில்தீர்வு காணப்பட்டது.

அரச மற்றும் தனியார் போக்குவரவுத் துறையினரது பிரச்சினைக்குள் பழக்கடை வியாபாரிகள் மற்றும் ஆட்டோ சாரதிகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவ்வாறு இனியும் அவர்கள் தலையீடு செய்தால் சட்டத்தின் முன் கொண்டுசெல்லப்படுவதுடன் பஸ் நிலையப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படவேண்டிய நிலைமையும் ஏற்படும் எனவும் ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஜெகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.