பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது – அமைச்சர் ரஞ்சித்

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஒவ்வொரு ஜூலை மாதமும் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணங்களை அதிகரிக்காமல் இருப்பதற்கு பஸ் உரிமையாளர்கள் ஒத்துழைத்துள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, தெரிவித்தார்.

கடந்த வருடத்தை விட இவ்வருடம் பஸ் சேவையை நடத்துவதற்கான செலவு 0.03 சதவீதத்தின் அடிப்படையில் குறைந்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரு கீலோ மீற்றர் சேவையை நடத்த ரூபாய் 89.97 இப்பொழுது, செலவாகின்றது. கடந்த வருடம் பஸ் கட்டணங்கள் அதிகரித்த போது இந்தசெலவு ரூபாய் 89.99 ஆக இருந்தது.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை. அத்துடன், குத்தகை வட்டி, திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்பு செலவுகளும் குறைந்துள்ளன. எனவே, பஸ் கட்டணங்களை தற்போது அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறினார்.

பஸ் உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கடந்த புதன்கிழமை (17) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

Related Posts