யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து, புதன்கிழமை (03) இரவு, பருத்தித்துறைக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில், மதுபோதையில் குழப்பம் விளைவித்த இளைஞனை, பயணிகளும் பஸ் நடத்துநரும் பிடித்து தங்களிடம் ஒப்படைத்ததாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.
பஸ்ஸில் ஏறிய இளைஞன், பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர், அதற்கான பணம் கொடுக்க முடியாது என நடத்துநருடன் ரகளை புரிந்துள்ளார்.
இதனை அவதானித்த பயணிகள், மதுபோதையில் இருந்த அந்த இளைஞனை மடக்கிப்பிடித்தனர். இதனையடுத்து பஸ், பொலிஸ் நிலையத்துக்கு திருப்பப்பட்டுள்ளது.
அங்கு பொலிஸாரிடம் குறித்த இளைஞனை ஒப்படைத்த பின்னர், இளைஞன் மீது, பஸ்ஸின் நடத்துநர் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.