பழைய பூங்காவில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுகின்றது

oldpark-bikooவட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களின் வழிகாட்டலில் யாழ் பழைய பூங்கா புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது யாழ் மாநகரசபையின் ஒத்துழைப்புடன் யாழ் பழைய பூங்காவில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுகின்றது.

இச்சிறுவர் பூங்கா பழைய பூங்கா புனரமைப்பின் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. இதற்கு ஆளுநர் ரூபா 13 மில்லியன் ஒதுக்கியுள்ளார்.

முதற்கட்டமாக குறித்த பகுதியை துப்புரவு செய்யும் பணியை யாழ் மாநகரசபை நேற்று முன்தினம் தொடக்கம் ஆரம்பித்துள்ளது.