Ad Widget

பழுதடைந்த நிலையில் சேவையாற்றும் தனியார் பஸ்களின் வழி அனுமதி ரத்து; ஜனவரி முதல் நடைமுறைக்கு

தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் இந்த மாத இறுதிக்குள் வாகனங்களைத் திருத்தி நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும்.பயணிகளின் பயணத்துக்கு தகுந்த முறையில் இல்லாது பழுதடைந்த நிலையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் வாகன வழி அனுமதிப் பத்திரம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்துச் செய்யப்படவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ளூர் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் ஆசனங்கள் சேதமடைந்து இருப்பது, ஜன்னல், கதவுகள், கம்பிகள் என்பன உடைந்த நிலையில் இருப்பது, ரயர்கள் தேய்வடைந்து காணப்படுவது போன்ற காரணங்களால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறான பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து தாமதமான சேவையை வழங்குவது தொடர்பாகப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.

பயணிகளின் சௌகரியமான, தாமதமற்ற சேவையை தனியார் பஸ்கள் வழங்க வேண்டும் என்பதற்கமைவாக பழுதடைந்த நிலையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் வழிஅனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வாகன வழி அனுமதிப்பத்திரம் பெற்று சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் இந்த மாத இறுதிக்குள் வாகனங்களைத் திருத்தி நல்ல முறையில் வைத்திருக்கவேண்டும்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பழுதடைந்த பஸ்களை சோதனையிட்டு அதற்கான வழிஅனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பஸ் உரிமையாளர்கள் இதனைக் கவனத்தில் எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home Share on email Share on print
Google0

Related Posts