பல் வைத்தியர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

boys-fight-cartoonயாழ்ப்பாணத்தில் பல் வைத்தியர் ஒருவர் இனந்தெரியாத குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு 9 மணிக்கு யாழ்.பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. இதில் நெடுந்தீவில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரே படுகாயமடைந்தவராவார்.

இவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சமயம் மது போதையில் வந்த குழுவென்று இவரது தலையில் மிக மோசமாகத் தாக்கியுள்ளது.

இதில் படுகாயடைந்த இவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழ்.பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts