பல்வேறு விபத்துக்களில் நேற்று இருவர் பலி!!

வாகன விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், அரியாலை, தபால்பெட்டிச் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில், வட்டுக்கோட்டையைச் சேர்ந்க்த திவாகரன் (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியினூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி இளைஞன் மீது, டிரக்டர் ரக வாகனம் ஒன்று மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், யாழ். மாநகரசபை ஊழியரொருவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அரியாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 7.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த நீர்வேலி வடக்கைச் சேர்ந்த ஆறுமுகம் மகேந்திரன் (வயது 72) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிசைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.