பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

dead-footயாழ். பல்கலைக்கழக 3ஆம் வருட மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் ஆண்டு மாணவனான சிவலிங்கம் யசோதரன் ( வயது24) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் நாச்சிமார் கோவிலடிப்பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்து கல்வி பயின்று வருபவர் என்றும் நேற்று இரவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.