யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு, அதுகுறித்த அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கே அழைப்பு விடுக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாது வேறு அரசியல் வாதிகள் அழைக்கப்படுவார்களா இருந்தால், வடக்குப் பகுதியில் மக்கள் ஆதரவு பெற்ற அரசியல்வாதிகள் அனைவரும் அழைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யாழ். பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், இல்லையேல் பல்கலைக் கழக ஆசிரியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்றுமுன்தினம் நடந்த யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுவதுடன், அதுகுறித்து துணைவேந்தருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.