பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அதிகரிக்கும் : மாவட்ட கோட்டா முறைமையிலும் மாற்றம்

university _grants_ commission_ srilanka2013ஆம் ஆண்டுக்கான பல்கலைத் தெரிவுக்கான வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்படவுள்ள இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களின் கல்வித்தராதரதா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் ஷனிகா ஹிரிம்புரேகம(Kshanika Hirimburegama) தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை அதிகமான மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். இருப்பினும் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களையே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க முடியும் என்பதால் வெட்டுப்புள்ளி அதி்கரிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் கல்வி நிலையங்களின் வளர்ச்சி காரணமாக நகர்புறங்கள் மட்டுமன்றி கிராமப் புறங்களிலும் கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளமையினாலேயே அதிகமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றனர் எனக் குறிப்பிட்டதுடன், கடந்த வருடமும் இதேபோன்று கல்வியில் ஒரளவு அதிகரிப்பு காணப்பட்டதால் இரண்டு பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகின. இதனால் பல பிரச்சினைகள் தோன்றியதுடன் பல்கலைக்கழக அனுமதிக்கும் மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவே இம்முறை இதைப்போன்ற ஒரு நிலைமை நடைபெறாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் 2012ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் கொழும்பு, அம்பாந்தோட்டை, மாத்தறை போன்ற மாவட்டங்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அதிகமான மாணவர்கள் சட்டம், மருத்துவம், பொறியியல் போன்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, பல்கலைக்கழகத் தெரிவுக்கான வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்படுமாயின், மாவட்ட மட்ட கோட்டா முறைமையிலும் மாற்றம் ஏற்படலாம்.