பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு உளப் பரிசோதனை

EXAMபல்கலைக்கழத்தில் பிரவேசிக்கும் புதிய மாணவ மாணவியருக்கு உளப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

உயர்கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இணைந்து இந்த நடவடிக்கைகயை எடுக்க உள்ளன. எவ்வாறான பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவியருக்கு உளப் பரிசோதனை நடாத்துவது உசிதமானதென கருதுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் ஷெனுகா ஹிம்புரேகம தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் உடல் தகுதிகளைப் போன்றே உள நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.