பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் பரவாயில்லை!– ஜனாதிபதி

mahintha_CIபல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் பரவாயில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு முன்னதாக கல்வி நடவடிக்கைகளை சரியாக செய்ய வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் உரிமை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இருக்கின்றது.

யாழ்ப்பாணம் சிட்டி ஹோட்டலில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் தாய் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தெற்கிலும் வடக்கிலும் பல மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor