இவ்வருடம் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய கல்வி முறை ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கலை, சமூகக்கல்வி மற்றும் முகாமைத்துவ பீடங்களில் முதலில் இந்த கல்வி முறை மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அதற்கு ஏற்றவாறு பாடப்புத்தகங்கள் அச்சிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விரிவுரைகளுக்கு பதிலாக மாணவர்களின் பங்களிப்பில் கல்வி கற்பிக்கும் முறையை அறிமுகம் செய்வதே நோக்கமென உயர் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிக்கின்றார்.
படைப்புத்திறன் மிக்க மாணவர் சந்ததி ஒன்றை உருவாக்கி குழுவாக இயங்கும் வகையில் மாணவர் மத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.