பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

university _grants_ commission_ srilanka2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டார்.

அடுத்தமாத இறுதிக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2013 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கான கையேடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்தார்.

பரீட்சைகள் திணைக்களத்தினால் பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், இந்த கையேடு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டது.