பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு

judgement_court_pinaiதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைய பல்கலைக்கழகங்களில்; சேர்த்துக்கொள்வதற்காக ஒப்புக்கொண்ட அளவுக்கு சில மாவட்டங்களில் போதியளவு மாணவர்கள் இல்லாத குறையை நிரப்புவதற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து மாணவர்களை சேர்ப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.

விதிக்கப்பட்ட சித்திப்புள்ளியை பெறாத மாணவர்களை பல்கலைகழகத்தில் அனுமதிப்பதை தவிர்ப்பதற்காக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இவ்வாறு கேட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு ஒரு பிரேரணை வடிவில் செய்த இந்த விண்ணப்பம் திங்கட்கிழமை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நீதிமன்ற செயன்முறையுடன் தொடர்பான சிலர் நீதிமன்றில் இல்லாத காரணத்தினால் இதனை விசாரிக்க முடியாது என கருத்துரைத்த நீதிமன்றம். சகல தரப்பினரையும் நீதிமன்றத்திற்கு வருமாறு அறிவிக்குமாறு பதிவாளர்களுக்கு பணித்து விசாரணையை பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Recommended For You

About the Author: Editor