பலாலி முகாமை அண்மித்த பகுதிகளில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி

யாழ். உயர் பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பலாலி, இடைக்காடு அன்டனிபுரத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மீள வழங்கி அம்மக்களை அங்கு மீள்குடியேற்றம் செய்ய யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

palaly-tellipplai

இதன் முதற்கட்டமாக சுமார் 350 ஏக்கர் பிரதேசமான இப்பகுதியில் காணிகளுக்கு உரித்துடைய பொதுமக்கள் தங்களது காணிகளைச் சென்று பார்வையிடுவதற்கான அனுமதியினை யாழ். படைத் தலைமையகம் நேற்று வழங்கியது.

இதற்கமைய 10 இடைத்தாங்கல் முகாங்களில் வசித்து வந்த மக்களில் 150 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது காணிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் கடல் வளத்தினையும் கண்டுகளித்தனர்.

கடந்த 23 வருடங்களுக்கு பின்னர் முதற் தடவையாக அம்மக்கள் தங்களது சொந்த காணிகளுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.