பலாலி படைத் தலைமையத்தில் புத்தர் மாடம் திறந்து வைப்பு

puththar-palalyயாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையக வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட புத்தர்மாடம் மற்றும் அரசமர சுற்றில் அபிமானத்துடன் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மகாதேரர்களின் பிரித் ஓதலுக்கு மத்தியில் யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்க மற்றும் அவரின் பாரியார் ஆகியோரால் புத்தர் மாடம் மற்றும் தங்க வேலி திரைநீக்கத்தினை செய்து வைத்தனர்.

அன்றைய தினம் மாலை விகாரைக்கருகில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், யாழ் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துறுசிங்க அவர்களின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சமய நிகழ்வில் அதி கௌரவ வண. பஹல பிடியல ஜனானந்த சுவாமிகள், சாஸ்திரவேதி வண. தரணாகம குசலதம்ம சுவாமிகள், திரிபிடகாச்சார்ய திரிபிடக்க விசாரத கஹகொல்லே சோமவன்ச சுவாமிகள் உற்பட கௌரவ ஒன்பது சுவாமிகள் அழைக்கப்பட்டதுடன், யாழ் கட்டளைத் தளபதி, அவரின் பாரியார் இராணுவ அதிகாரிகள், படை வீரர்கள் பெருளவானோர் கலந்து கொண்டனர்.