பலாலி இராணுவ முகாமில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இராணுவ வீரர் படுகாயம்

Minesயாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 9.30 மணியளவில் இவ் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் வெடிப்புச் சம்பவத்தில் லலித் தாமர (வயது 27) என்ற இராணுவ வீரரே காயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இராணுவ வீரர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடியொன்றே வெடித்துள்ளதாக பலாலி இராணுவ தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.