பருத்தித்துறை பொதுச்சந்தை திறப்பு விழா

யாழ். பருத்தித்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொதுச்சந்தையினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

image (3)

இச்சந்தைக் கட்டிடத் தொகுதி வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பருத்தித்துறை நகர பிதா ரவீந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜிலிங்கம், சந்திரலிங்கம் சுகிர்தன், வேலுப்பிள்ளை சிவயோகன் ஆகியோரும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபயகோன், யாழ்.பல்கலைக்கழக பொறியியலாளர் எஸ்.சிவகுமார், உள்ளூராட்சி மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், பருத்தித்துறை நகர சபையின் செயலாளர் நடராஜா செவ்வேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.