பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் நீதி, நியாயாதிக்கப்பகுதிக்குள் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் ஒலிபெருக்கிப் பாவனைக்கு நீதிமன்று தடைவிதித்துள்ளது.
பொதுநலன் கருதி இந்த உத்தரவை பிறப்பிப்பதாக மாவட்ட நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டார்.
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடிப் பொலிஸ் பிரிவுகளில் ஆலயங்கள், விசேட விழாக்கள் போன்றவற்றில் அதிகரித்த ஒலியுடன் ஒலிபெருக்கிகள் அலறவிடப்படுவதால் மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இந்தப்பகுதிகளில் உத்தரவை மீறி செயற்கடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பொலிஸாருக்குப் பணிக்கப்பட்டுள்ளது.