பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 10 வயது மாணவன் மோட்டார் சைக்கிள் மோதி மரணம் மாங்குளத்தில் சம்பவம்

மாகாண மட்ட புலமைப் பரிசில் பரீட்சை எழுதிவிட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த மாணவனை மோதி தள்ளிவிட்டுத் தலைமறைவாகியது மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலேயே மாணவன் துடிதுடித்து இறந்தான். இந்தச் சம்பவம் நேற்று மாங்குளத்தில் இடம்பெற்றது.

நேற்றைய தினம் மதியம் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்புவதற்காக பஸ்சுக்கு காத்திருந்த சிறுவனை வீதியால் சென்ற  மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காது தப்பிச் சென்றது. சம்பவத்தில் குஞ்சிக்குளம் மாங்குளத்தைச் சேர்ந்த மாணவன் பலியானார்.